ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், அதனை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது எமக்குத் தெரியாது.
அவ்வாறு ரணில் போட்டியிடவில்லை என்றால் அதனை தெரிவிக்கவேண்டும்.
அவ்வாறு தெரிவித்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக நாம் ஆராயமுடியும். சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இலகுவாக இருக்கும்
இந்த ஆண்டில் முதலாவதாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். ஜனாதிபதி இதனை அமைச்சரவைக்கு அறித்துள்ளார்.
ஆனால் தான் போட்டியிடுவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஜனாதிபதி வெளியிடவில்லை
தற்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருக்கின்றார்.
ரணில் விக்கிரசிங்கவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தால் அமைச்சரவையிலிருந்து இரண்டு வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
எனவே இது தொடர்பில் எமது கட்சியாலும் ஒரு சிந்த தீர்மானத்தை எடுக்கமுடியும்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.