எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும். இது பிரஜைகளிடையே தேசிய உணர்வை உருவாக்கும்.
கட்டாய தேசிய சேவையின் கீழ் 18 வயது இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு இராணுவத்தில் சேரவேண்டும். இதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் செலவிடும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.