தென்னாபிரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இன்று ஆரம்மாகியுள்ளது.
இன்னிலையில் தென்னாபிரிக்காவில் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 1994 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறவுள்ள ஏழாவது ஜனநாயகத் தேர்தல் இதுவாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 ஆண்டுகளாக, தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனினும், இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இந்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்துஇரவு 9 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையவுள்ளதுடன் 23,292 வாக்குச்சாவடிகள் செயல்படுவதாக தென்னாப்பிரிக்காவின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.