சீன அரசின் உதவியுடன், உச்ச நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம், நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ஆகியோர் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 229 மில்லியன் யுவான் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த ஒப்பந்தத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் ஆலோசகர் டாங் யாண்டி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.