நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அதன்படி இன்சுலின் ஊசிக்கு பதிலாக, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.
இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த புதிய முறை வெற்றியடைந்துள்ளதுடன், அந்த நோயாளிகளின் நீரிழிவு நிலை நீங்கியதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.