அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் முக்கியமான அமைச்சுப் பதவியைக் கூட பெற்றுக்கொள்ளும் திறமை தனக்கு இருப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் எதிர்க்கட்சிகளும் தம்மைத் தம்முடன் இணைத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், தாங்கள் இணைந்தாலும் உயர் பதவியைப் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், எல்லோரும் ஒரே சித்தாந்தத்தை தான் கடைபிடிக்கிறார்களே தவிர, அரசியல் லாபத்திற்காக தனது சித்தாந்தங்களை மாற்றத் தயாராக இல்லை என்று அவர் தெரிவித்தார்
ஆனால், தற்போது அரசியல் ரீதியாக எவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டாலும், அதேபோன்று தனது சித்தாந்தத்தைப் பேணிக்காக்க தாம் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.