பீகாரில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 40° Cக்கும் மேல் வெப்பம் அதிகரித்துள்ளதால் பலரும் வெப்ப வாதத்தால் (ஹீட் ஸ்ட்ரோக்கால்) பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.