• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியதாக ஜீவன் மீது குற்றச் சாட்டு!

தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியதாக ஜீவன் மீது குற்றச் சாட்டு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/03
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து நடந்துகொண்ட விதம், சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா, நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கம்பனிக்குச் சொந்தமான தோட்டத்தில், தேயிலை உற்பத்திக்குப் பதிலாக, கோப்பி பயிரிடுவதற்காக குறித்த நிறுவனம், பேக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி, அந்தத் திட்டத்தை ஆரம்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிரதேசத்தில் இரண்டு தோட்டத் தலைவர்கள் இருவர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது.

இதனையடுத்து குறித்த இரண்டு ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து அந்த நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

தொழிலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தோட்ட முகாமைத்துவ அதிகார சபையினர் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து அண்மையில் குறித்த தொழிற்சாலைக்குச் சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது ஆதரவாளர்களுடன் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

சர்வதேச தரம்வாய்ந்த தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஏராளமான தரச் சான்றிதழ்களைப் பெறுவது அவசியமாகும்.

இந்தத் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்களில் அடிக்கடி கண்காணிப்பு சோதனைகள் நடப்பதுண்டு.

குறிப்பாக உணவு, குடிபானம் உள்ளிட்ட உற்பத்திகளில் இந்த தரக் கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாளும்போது, அனுமதியின்றி உட்பிரவேசித்து, உற்பத்திகள் நடக்கும் இடத்தில் குழப்பம் விளைவிப்பது அந்த உற்பத்தித் துறைக்கும், அந்த தொழிற்சாலைகள் பெற்றுள்ள தரச் சான்றிதழ்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாறான தொழிற்சாலைகளுக்குச் செல்லும்போது, உரிய அனுமதியுடன் செல்வது கட்டாயமாகும் என்றும் தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகம் சார் உற்பத்திகளின் போது அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்துகொள்வது எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பெற்றுள்ள வர்த்தக நாமத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்றும் தோட்டக் கம்பனி சார்பாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்துகொள்வது ஒட்டுமொத்த தேயிலை சன் நாமத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் செயற்பாடுகளை அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: JEEVANJeevan Thondaman
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

Next Post

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்
இந்தியா

உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்

2026-05-06
Next Post
தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு - பிரமித்த பண்டார! (update)

தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் : மஞ்சள் அபாய எச்சரிக்கையும் விடுப்பு!

டெல்லியை வாட்டும் வெப்பம்: தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்!

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அனைத்து பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.