மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி 12 தொகுதிகளில் மட்டுமே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பா.ஜ.க வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் பா.ஜ.க 5, காங்கிரஸ் 4, மதசார்பற்ற ஜனதா தளம் இரண்டு, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பாஜக கூட்டணி 295, இந்தியா கூட்டணி 231 மக்களவைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க குஜராத் சூரத், கர்நாடக சித்ரதுர்கா, மத்திய பிரதேசம் திகாம்கர், இந்தூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கர்நாடக குல்பர்கா, மேகாலயா துரா, பஞ்சாப் ஜலந்தர், ஃபதேகர் சாஹிப் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாண்டியா, கோலாரில் மதசார்பற்ற ஜனதா தளமும், பஞ்சாப் சங்ரூரில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.