”அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டமூலம் ஒன்றை முன்வைத்துள்ளது” என
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பின் சில ஏற்பாடுகளுக்கு குறித்த சட்டமூலம் முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டமூலம் ஒன்றை முன்வைத்துள்ளமையை இதன் ஊடாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, உத்தேச மின்சாரசபை சட்டமூலத்தில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை கருத்திற்கொண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்” இவ்வாறு விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.














