”நுவரெலியா உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு”
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் பொது செயலாளர் என்ற வகையிலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளேன்.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அனைத்து நபர்களும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியம்”இவ்வாறு ஜீவன் தொண்டமான் தெரிவித்துளார்.
நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயற்பட்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.