”மின்சார சட்டமூலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின்சாரபையினை 12 பிரிவுகளாக ஆக வகுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனூடாக மின்சாரசபையை விற்பனை செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
எனவே உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மூலம் நிறைவேற்றப்படும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.