சிறுவனொருவன் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோடை – ஆசிரிமலை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தாக்குதலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணலாறு – கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான பிரதான சந்தேகநபருடன், 37 மற்றும் 46 வயதான இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் சிறுவனொருவனைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.