• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி!

மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/05
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது.

எனினும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை பா.ஜ.க பெற்றிருக்கின்றது.

இதேவேளை எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று, முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கின்றது.

இந்தியாவிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளார்.

ஆனால், கடந்த முறை 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்து பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார்.

மறுபக்கம், அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தோற்கடித்த பா.ஜ.க வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னௌவில் ராஜ்நாத் சிங் மற்றும் கன்னௌஜில் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதியாகியுள்ளதுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கின்றார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இம்முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும், குஜராத்தில் மொத்தமுள்ள 26-இல் 25 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளதுடன், பிகாரில் பாஜக 12 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.

மேலும், ராஜஸ்தானில் கடந்த முறை 25 இடங்களிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க, இந்த முறை 14 இடங்களிலும், ஹரியாணாவில் கடந்த முறை மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க 9 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 7 இடங்களை கைப்பற்றியுள்ளதுடன், காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) 9 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களிலும் வெற்றி உறுதி செய்துள்ளதால் பா.ஜ.கவுக்கு அங்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

எனினும், ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ல் பா.ஜ.க சிறப்பான வெற்றி பெற்றுள்ளதுடன், காங்கிரஸ் ஒரு தொகுதியை மாத்திரம் கைப்பற்றியுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த முறை 25 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க இம்முறை 17 தொகுதிகளிலும், கடந்த முறை ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற ஆளும் காங்கிரஸ், இம்முறை 9 இடங்களிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

கேரளத்தில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றிபெற்றுள்ளதுடன், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளிலும், ஆளும் மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்கி ஜூன் 1-ஆம் திகதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணும் பணிகள் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், பின்னர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருந்தது.

மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில், பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 292 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

எனினும், கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், அதன் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்து 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 300 இடங்களைக்கூட பெற முடியவில்லை.

இன்று காலை நிரவரப்படி,

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பாஜக – 240

தெலுங்கு தேசம் – 16

ஐக்கிய ஜனதா தளம் – 12

சிவசேனை(ஷிண்டே) – 7

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – 5

மதசார்பற்ற ஜனதா தளம் – 2

ஜனசேனை – 2

ராஷ்ட்ரீய லோக் தளம் – 2

தேசியவாத காங்கிரஸ் – 1

ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் – 1

அஸோம் கண பரிஷத் – 1

அப்னா தளம் (சோனிலால்) – 1

அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் – 1

மதச்சாhபற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா – 1

மொத்தம் – 292

இந்தியா கூட்டணி :-

காங்கிரஸ் – 99

சமாஜவாதி – 37

திரிணமூல் – 29

திமுக – 22

சிவசேனை(உத்தவ்) – 9

தேசியவாத காங்கிரஸ்(சரத்) – 8

மார்க்சிய கம்யூ. – 4

ராஷ்ட்ரீய ஜனதா தளம் – 4

ஆம் ஆத்மி – 3

ஜார்கண்ட் முக்தி மோh்ச்சா – 3

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3

இந்திய கம்யூனிஸ்ட் – 2

விடுதலைச் சிறுத்தைகள் – 2

ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 2

கேரள காங்கிரஸ் – 1

மதிமுக – 1

இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்)(எல்) – 2

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி – 1

ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி – 1

பாரத ஆதிவாசி கட்சி – 1

மொத்தம் – 234

தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – 4

ஏஐஎம்ஐஎம் – 1

சிரோமணி அகாலி தளம் – 1

ஜோரம் மக்கள் இயக்கம் – 1

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா -1

மக்கள் குரல் கட்சி 1

ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 1

சுயேச்சைகள் – 7

மொத்தம் – 17

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathNarendra Modi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய நபர் கைது!

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

Related Posts

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!
இந்தியா

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

2026-08-05
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!
ஆசிரியர் தெரிவு

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

2026-08-05
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!
அமொிக்கா

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

2026-08-05
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!
இலங்கை

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05
Next Post
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

உள்நாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை புரட்சி! 

0
சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

0
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

0
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு !

0
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.