நாட்டின் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் மாத்திரம் சுமார் 25 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் 25 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னரான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.
எனினும், நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.