சஜித்தையும் அநுரவையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் சந்திக்க வைக்கவுள்ள ஊடகம், கவனமாகவும், பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கவும் வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதளிலிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, சஜித் – அநுர விவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித அபேகுணவர்தன,
”சஜித் – அநுர விவாதம் அரசியல் கேலிக்கையாக மாறியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் இருவரின் விவாதமும் வெறும் கதையாக மாத்திரமே இருக்குமென தோன்றுகிறது.
எனினும், இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் சந்திக்க வைக்கவுள்ள ஊடகம், கவனமாகவும், பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும்.
ஏனெனில், இரு பூணைகளை ஒரே அறையில் அடைத்து வைத்தால், இறுதியில், அந்த பூனைகளின் வாள் மட்டுமே மிஞ்சும். அது போன்றுதான் இவர்கள் இருவரும்.
எனவே பாதுகாப்புடன் இவர்கள் இருவரையும் சந்திக்க வைப்பதே சிறந்தது. இணங்கி போகாத இருவரையே விவாதம் நடத்த முயற்சிக்கின்றீர்கள்.
இவர்கள், நேற்று இன்று அல்ல. 88-89 களிலிருந்தே இணங்கிபோக மாட்டார்கள் ஆகையால் இவர்களை சந்திக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல என தோன்றுகிறது.” குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோஹித அபேகுணவர்தன,
“தேர்தலில் போட்டியிட தற்போதைய ஜனாதிபதிக்கு எவ்வித தடையும் இல்லை. இன்று வரை அநேகமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள்.
தேர்தலை பிற்போடுவதற்கு யார் முயற்சித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு இணங்காது. தேர்தல் நடந்தே ஆக வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் தேர்தலை நடத்தியவர். அந்த தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.
அப்பேட்பட்ட, ஜனநாயக தலைவரின் கட்சி, தேர்தலுக்கு முகங்கொடுக்க அஞ்சப்போவதில்லை. வெற்றிபெற வைப்பதும், தோல்வியடைய வைப்பதும் மக்களின் கைகளிலேயே உள்ளது.
எந்த தேர்தல் நடைபெறும் என சரியாக தெரியவில்லை. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் பட்சத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயரும் அறிவிக்கப்படும்.
அத்துடன் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.