வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய, கிராமிய வீதி மற்றும் கிராமங்களில் பாலங்கள் நிர்மாணிக்கும் பணிகளிலிருந்து தமது உறுப்பினர்கள் விலகி செயற்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.