பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பானது 40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள இந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.