நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
அதன்படி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டாா்.
இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.