நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தேசிய கொள்வனவு முறைமைக்கு அமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை முறைமைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின், ஒரு இலட்சம் ரூபா செலவாகும் என அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி நிதியம், நன்கொடைகள் மூலம் வழங்கப்படும் கீமோ சிகிச்சைக்கான மருந்துகள் போதுமானதாக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.