தென் சீனாவின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல வெள்ள அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய மோசமான வானிலை பதிவாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் சீனாவின் சில பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் புஜியன் மற்றும் குவாங்சி நகரங்கள் வெள்ளம் உள்ளிட்ட வானிலை தொடர்பான பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த பகுதியில் வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் தெற்கு சீனாவின் பல மாகாணங்களுக்கு நான்காம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.