அணி என்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு அணி என்ற வகையில் எங்களின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிந்து போனமைக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என அவர் தெரிவித்தார்.
எனவே, எங்களை மன்னிக்குமாறு கோருவதாகவும் நாங்கள் இங்கு வந்தமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இதேவேளை, நாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை எனவும் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் குறைந்த ஓட்டங்களை பெற்றிருந்த போதும் அதற்காக போராட முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இறுதியாக எங்களால் வெற்றிபெற முடியவில்லை எனவும் இதுபோன்ற தொடரில் ஒரு போட்டியில் தோற்றாலும் முன்னேறுவது மிகவும் கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எங்களுக்கு ஆதரவளிக்கும் இரசிகர்களுக்கு எங்களால் மகிழ்ச்சியை தர முடியாதமை குறித்து வருத்தமளிப்பதால், எங்களை மன்னித்து விடுங்கள் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.