கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் மறைந்த துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவின் (Saulos Chilima) இறுதி ஊர்வலத்தின் மீது வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று மோதியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் லிலாங்வேக்கு தெற்கே 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிலிமாவின் சொந்த கிராமமான என்சிபே வழியாக அவரது உடல் நேற்றைய தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.