பிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன் பின்னர், முதன்முறையாக மூன்று வருடங்களுக்கு பின்னர், தற்போது பணவீக்க இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும், ஜுலை மாதம் 4 திகதி பிரித்தானியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணவீக்கத்தின் இலக்கு குறித்து பிரிதமர் ரிஷி சுனக் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஜூன் முதல் பணவீக்கம் ஓரளவு மீண்டு வருவதாக தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் Paula Bejarano Carbo தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் இலக்கை நோக்கி திரும்பியுள்ளதாகவும், இதன் நன்மைகளை மக்கள் உணர்வார்கள் எனவும் தெரிவித்துள்ள, Paula Bejarano Carbo, வாழ்க்கைச் செலவு சுமைகளும் குறைவடையும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, லேபர் கட்சியின் துணை தலைவர் ரேச்சல் ரீவ்ஸ் (rachel reeves) குறைந்த பணவீக்க எண்ணிக்கை வரவேற்கத்தக்கது. எனினும் மக்கள் இன்னும் போராடி வருவதாகவும், பணவீக்கம் உயரத் தொடங்கிய கடந்த 2021 ஆம் ஆண்டை விட விலைகள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.