நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது.
குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 மாணவர்களும், கோத்ராவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.