கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட லோரன்ஸ் புதா என்ற மீனவப் படகின் மீனவர்கள் 6 பேர் ஐந்து மாதங்களுக்கு பின்னர் வத்தளை, திக்கோவிட்ட துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
6 மீனவர்களுடன் கடந்த ஜனவரி 17 ஆம் திகதி லோரன்ஸ் புதா என்ற படகு தனது கன்னிப் பயணத்தை திக்கோவிட்ட மீனவ துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தது. இதனையடுத்து ஜனவரி 27 ஆம் திகதி அரபுக் கடலில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் படகு முற்றுகையிடப்பட்டது.
சீசெல்ஸ் கரையோர பாதுகாப்பு படையினரின் உதவியுடன் லோரன்ஸ் புதா மீனவப் படகும் அதில் பயணித்த மீனவர்களும் கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் மீண்டும் குறித்த மீனவர்கள் 6 பேருடன் குறித்த படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.