மன்னார்- முருங்கன் ரயில்கடவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முருங்கன் ரயில் கடவை பகுதியில் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நானாட்டான் சாளம்பன் நாகசெட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.