காசாவில் மனிதாபினான உதவிகளை வழங்கும் வாகனங்களுக்காக காத்திருந்த பலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பின் சுகாதார துறை தெரிவித்தள்ளது.
நேற்று ஒரே நாள் இரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆம்புலன்ஸ் சிகிச்சை பிரிவின் இயக்குனர் ஒருவரும், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பானி சுலைகா பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், நிவாரண பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தின் பாதுகாவலர்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்தந்தவர்கள் சிகிச்சைப்பெற்று வருவதாக காசா சுகாரதார அமைச்சு தெரித்துள்ளது.
கடந்தாண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை 37,626 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மற்றும் 86,098 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் 1,139 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.