கடந்த ஆண்டு பதின்மூன்று தொழில்துறைகளைச் சேர்ந்த நூற்றி ஏழு தொழிலதிபர்கள் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது
இதேவேளை, சூரியவெவ பிரதேசத்தில் இருபது ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான செலவு வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டையில் உள்ள 60 ஏக்கர் காணி எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் 17 கைத்தொழிலுக்கு தொடர்புடைய 109 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புத்தல கைத்தொழில் கிராமத்தில் 43 காணிகள் ஒதுக்கப்பட்ட போதிலும், இருபது கைத்தொழில்துறையினருக்கு 38 காணிகள் மாத்திரமே வழங்கப்பட்டு ஐந்து கைத்தொழில்துறையினரே உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.