ராஜா ராணி திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர் அட்லி அடுத்ததாகவே விஜயை வைத்து இயக்கி தமிழ் சினிமாவில் விஜய்யின் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டார்.
தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய்க்கும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொஞ்ச காலம் பிரேக் எடுத்த பின் பொலிவூட்டில் கால் தடம் பதித்தார்.
ஷாருக்கான் , நயன்தாரா , தீபிகா படுகோன் , விஜய் சேதுபதி என ஒரு நட்ச்சத்திர பட்டாளத்தை ஒன்று சேர்த்ததோடு , அனிருத்தையும் பொலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். படம் எதிர்பார்த்தைதை விட சூப்பர் ரூப்பர் ஹிட் ஆனது. இந்திய மதிப்பின்படி 1000 கோடி ரூாபாய் வசூலை படம் குவிக்கவே அட்லியின் கதையில் நடிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார்களும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.
தற்போது அந்த கனவும் நிஜமாகும் நிலைக்கு வந்துள்ளது. சல்மான் காணையும், ரஜினி காந்தையும் ஒன்றாக இணைத்து அட்லி படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதோடு , இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.