அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரபல ஊடகமொன்று முன்னெடுத்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
குறித்த கருத்துக்கணிப்பின்படி, ட்ரம்பா? பைடனா? என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் ட்ரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.
அதேசமயம் ட்ரம்பா அல்லது கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் ட்ரம்புக்கும், 45 சதவீதம் பேர் கமலா ஹாரிஸுக்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளதாகவும், இதனால் அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.