நடந்து முடிந்த பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிக் கூட்டணி முன்னிலை வகித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்த முதலாவது சுற்று தேர்தலில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையில் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து.
இந்நிலையில் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், யாரும் எதிர்பாராத வகையில், இடதுசாரிகள் கூட்டணி New Popular Front மொத்தமாக 182 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் பெரும் பின்னடவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணி 163 ஆசனங்களையும், அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று கருதப்பட்ட தீவிர வலதுசாரிகள் கூட்டணி 143 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்தக் கூட்டணிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பதால், அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சி தொடர்பில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.