லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் COLOMBO STRICKERS மற்றும் JAFFNA KINGS ஆகிய அணிளுக்குடையில் இடம்பெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில், 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் JAFFNA KINGS அணி வெற்றிபெற்றுள்ளது.
தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற JAFFNA KINGS முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய COLOMBO STRICKERS 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
COLOMBO STRICKERS சார்பில் Glenn Phillips 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, 189 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய JAFFNA KINGS -18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது.
JAFFNA KINGS சார்பில் Rilee Rossouw ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை, இன்றிரவு 7.30க்கு GALLE MARVELS மற்றும் KANDY FALCONS ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.