முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மன்னிக்க முடியாத தாக்குதல் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இந்த துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர் தப்பியமை குறித்து நிம்மதியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனநாயக செயற்பாடுகளில் வன்முறைக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசா யுத்தம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதையும், ட்ரம்ப் மீதான தாக்குதலையும் தொடர்புபடுத்தி, கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர்,
இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனவும், இதுபோன்ற சம்பவங்களை எந்த தயக்கமும் இன்றி எதிர்க்க வேண்டும் எனவும் வலியுத்தியுள்ளார்.
மேலும், அரசியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், தாம் விவாதத்தின் உணர்ச்சியின் அளவை குறைக்கவேண்டும் எனவும், சொல்லாட்சியை அதிகரிப்பதன் மூலம் எந்த பயனும் கிட்டப்போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் குறிப்பிட்டுள்ளார்.