முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
“எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.