ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செலவீனங்கள் தொடர்பாக முழுமையான அறிக்கை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹல்தல்துவ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான மொத்த செலவீனங்கள் தொடர்பான அறிக்கை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகரின் கோரிக்கைக்கிணங்க பாதுகாப்பு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகர் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அத்தியட்சகர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.