அஸ்வெசும உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி உதவித்திட்டங்கள் கோரி இதுவரை 4லட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
படவிளக்கம்
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை உதவித்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்தில் 3.4 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 1.8 மில்லியன் தகுதியுள்ள பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்
இவர்களில் எஞ்சியுள்ள 1.6 மில்லியன் பயனாளர்கள் நலன்புரி நன்மைகள் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின் ஊடாக அஸ்வெசும கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றுக்காக விசேட முறைமையின் கீழ் கடன்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது