கட்டுகஸ்தோட்டை, மடவளை வீதியில், மகாவலி கங்கையின் நீராடும் பகுதிக்கு அருகில் நேற்று (14) இரவு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹந்தகல, ஹலோய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.