தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சிவில் அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், நேற்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதன்போது ”தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா என்பதும் அன்றைய தினம் அறிவிக்கப்படும்”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.