இலங்கை கடற்படையினரால் தமிழ் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, இன்று தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இராமேஸ்வரம், பேருந்து நிலையத்திற்கு அருகில், கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு மீனவர்கள், குறித்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இப் போராட்டத்தில் மீனவர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினரும் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது ”இலங்கை அரசாங்கத்தின் வசமுள்ள படகுகளை விடுவிக்க தமிழ் நாட்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.