புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று அவர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணியுடன் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாகக் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.