இந்தியாவின் கேரளா மாநிலத்தில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 4 ஆலோசனைகளை வழங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















