அத்துருகிரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் க்ளப் வசந்த மற்றும் நயன வாசுல விஜேசூரிய ஆகியோர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன் கிளப் வசந்த’ கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய யுவுதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிளப் வசந்த’ கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் இன்றைய தினம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.