எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்து வெல்வோம், காலியில் நாம் பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்தோடு, சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் தலைவன் நான் அல்லன். நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, முன்னோக்கிச் சென்றுள்ளதாகவும் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டுவருவதுடன், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீரவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்வதாகவும் மக்கள் கஷ்டத்துக்கு மத்தியிலேயே வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளமை எமக்கு புரிவதாகவும் எனவேதான் பிரச்சினைகளை கட்டங்கட்டமாக தீர்த்துவருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.