வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழா ஒலிம்பிக் மரபுகளுக்கு அப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
33 வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பரீஸ் நகரில் செய்ன் நதியை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமாக ஆரம்பமானது
100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் வரலாற்றில் பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. பரிஸ் நகரில் உள்ள செய்ன் நதியை மையமாக கொண்டு பிரமாண்டமாக ஆரம்பவிழா நடைபெற்றது
உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் முன்பாக நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஒலிம்பிக் தலைவர் ஆகியோர் பரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈபிள் கோபுரத்தில் கண்கவர் ஒளிக் காட்சியும் இடம்பெற்றத. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர் செய்ன் நதியை மையமாகக் கொண்ட பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பவிழாவை கண்டுகளித்தனர்.
பரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பவிழா வண்ணமயமான பாடல்கள் மற்றும் நடனங்களுடன்;பிரம்மாண்டமாக காட்சியளித்தது. பிரான்சின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடனங்கள் அமைந்திருந்தன.
மேலும் இதன்போது பிரான்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பாரம்பரியமாக மைதானத்தில் கட்டப்படும் ஒலிம்பிக் ஜோதிக்கு பதிலாக,நிறுத்தி வைக்கப்படும் ஒலிம்பிக் ஜோதி பயன்படுத்தப்பட்டது.
ஆரம்பவிழாவில் விழாவில் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதன்போது முதலாவதாக ஒலிம்பிக் கொடியினை ஏந்திய அகதிகள் ஒலிம்பிக் குழுவினர் செயன்நதிக்கரையில் ஆரம்பவிழாவில் இணைந்தனர்
176 ஆண்டுகளுக்கு பின்னர் 6 விளையாட்டு வீரர்கள் அடங்கிய இலங்கை அணி ஒலிம்பிக் ஆரம்பவிழாவில் இணைந்தது.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 வயதான பேட்மிண்டன் வீராங்கனை வீரேன் நெட்டசிங்க மற்றும் தடகள வீராங்கனை தில்ஹானி லேகம்கே ஆகியோர் இலங்கை கொடியை ஏந்திச் சென்றனர்.ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களின் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுவதுடன் அமெரிக்காவைச் சேர்ந்த 594 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.