காலி மாவட்டத்தின் ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு குறித்த ஒருவரை குறிவைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவதாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலக்கு வைக்கப்பட்டவர் காயமடைந்திருந்தாகவும், காணமடைந்தவரை முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டபோது இரண்டாவது தடவையாக முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் சாரதியும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காயத்தையும் பொருட்படுத்தாது, முச்சக்கரவண்டிச் சாரதி, முச்சக்கரவண்டியை வைத்தியசாலை நோக்கி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ஹபராதுவ மற்றும் அகுலுகஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.