யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்த பத்து மோட்டார் வாகன சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பயணித்த சாரதிகள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீறி செயற்பட்டிருந்த 10 பேர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்ணை பகுதியில் நேற்றையதினம் பெருமளவாவர்கள் நடை பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள், சிறுவர்களுடன் கடற்கரையில் பொழுதை கழிக்கவும் கூடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பாரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல், வீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர்.
இந்நிலையில் அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவதானம் செலுத்திய பொலிஸார் நேற்று 10 பேரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.