வடகொரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியத் தலைவரின் வாகன அணிவகுப்பு வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணிப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இதேவேளை சினுஜு மற்றும் உய்ஜு பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பாதிக்கப்பட்ட 4,000 க்கும் மேற்பட்ட மக்களை விமானங்கள் மூலம் வெளியேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.