காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் (ஜூலை- 31) நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
எனவே இனிமேல் காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் எனவும், அவ்வாறு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதி சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் பொது மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.