ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் காரணமாகவே பசில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நிறுத்தும் தீர்மானித்தினால் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில்இ பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் பல்வேறு மட்ட கலந்துரையாடலில் ரணில் – பசில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.